மகேஷ்பாபுவின் இடத்தை பிடித்த லாவண்யா திரிபாதி
தமிழில் சசிகுமார் நடித்த பிரம்மன் மற்றும் மாயவன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. தற்போது தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வரும் இவர், சமீபத்தில் தெலுங்கில் அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களில் நடித்திருந்தார். இந்தநிலையில் அந்தப்படத்தின் வெற்றி லாவண்யாவுக்கு புதிய வாய்ப்பு ஒன்றை தேடிக் கொண்டு வந்து தந்துள்ளது..
ஆம்.. தென்னிந்தியாவின் பிரசித்தி பெற்ற சமையல் எண்ணெய் நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தம் ஆகியுள்ளார் லாவண்யா திரிபாதி. இதற்கு முன்னதாக மகேஷ்பாபு இந்த நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்து வந்தார். அவரது ஒப்பந்த காலம் முடிவடையும் நிலையில் இருப்பதால் அவருக்கு பதிலாகத்தான் தற்போது லாவண்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிறுவனத்தின் புதிய விளம்பர படப்பிடிலும் சமீபத்தில் கலந்து கொண்டார் லாவண்யா.