தனுஷ் - செல்வராகவன் பட தலைப்பு மாற்றமா?
ADDED : 1772 days ago
துள்ளுவதோ இளமை தொடங்கி பல படங்களில் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த தனுஷ், அடுத்தபடியாக நானே வருவேன் என்றொரு படத்தில் நடிக்கப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு அப்படத்தின் பர்ஸ்ட்லுக் தலைப்பை அறிவித்தனர். அதோடு இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்டு 20 முதல் நடைபெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில், நானே வருவேன் தலைப்பை தனுஷின் ரசிகர்கள் வரவேற்றபோதும், ஒரு சிலர் இது மிகவும் சாதரணமாக உள்ளது என்கிற விமர்சனங்களும் அப்போது எழுந்தது. அதனால் தற்போது நானே வருவேன் தலைப்பை மாற்றி புதிய தலைப்பு வைக்க செல்வராகவன் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என கூறப்படுகிறது.