உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அதிகாரத்தில் இணைந்த தமன்

அதிகாரத்தில் இணைந்த தமன்

வெற்றிமாறனின் கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படம் ‛அதிகாரம்'. இப்படம் குறித்த தகவலை சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தார் அப்படத்தின் தயாரிப்பாளரான பைவ் ஸ்டார் கதிரேசன். துரை செந்தில்குமார் இயக்கும் இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி வெளியிடுகின்றனர். தற்போது அப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், டெக்னீசியன்கள் குறித்த தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இப்படத்திற்கு தமன் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக அவரது புகைப்படத்துடன் தனது டுவிட்டரில் ஒரு அப்டேட் வெளியிட்டுள்ளார் கதிரேசன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !