ஆர்ஆர்ஆர் மேக்கிங் வீடியோ வரவேற்பு : ராஜமவுலி நன்றி
ADDED : 1590 days ago
ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தொடங்குகிறது. ஒரு பாடல் ஐதராபாத்திலும், மற்றொரு பாடல் உக்ரைனிலும் படமாக்கப்படுகிறது. மேலும் அக்டோபர் 13-ந்தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஆர்ஆர்ஆர் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டார் ராஜமவுலி. அதற்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்துள்ளனர். கர்ஜனை ஆர்ஆர்ஆர் என்ற பெயரில் வெளியான அந்த மேக்கிங் வீடியோவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது ராஜமவுலிக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
அதையடுத்து தனது டுவிட்டரில், ஆர்ஆர்ஆர் மூவியின் மேக்கிங் வீடியோவிற்கு அருமையான வரவேற்பு. அனைவருக்கும் நன்றி. இது நாங்கள் டிரைலரை வெளியிட்டது போலவே உள்ளது என்று ராஜமவுலி பதிவிட்டுள்ளார்.