திரில்லர் கதையில் ‛வார்டு-126'
ADDED : 1541 days ago
எஸ்எஸ் டாக்கீஸின் முதல் தயாரிப்பில் சாய் செல்வா இயக்கத்தில் உருவாகும் படம் ‛வார்டு-126'. பெண்மையை மையப்படுத்தி விறுவிறுப்பான திரில்லர் கலந்த காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது. நாயகனாக மைக்கேல் தங்கதுரை, ஜிஷ்ணு மேனனும் நாயகிகளாக ஷ்ரிதா சிவதாஸ், சாந்தினி தமிழரசன் , வித்யா பிரதீப், ஸ்ருதி ராமகிருஷ்ணனும் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால், ஸ்ரீமன், நிஷாந்த், தீபா ஷங்கர், வினோத் சாகர், கலைராணி மற்றும் பலர் நடித்துள்ளனர். சுரேஷ்குமார் ஒளிப்பதி செய்ய, வருண் சுனில் இசை அமைத்துள்ளார். சென்னை, நொய்டா, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
‛‛இத்திரைப்படத்தின் தலைப்பு ஒரு முடிவின் தொடக்கமாக அமைந்துள்ளது'' என்கிறார் இயக்குனர் சாய் செல்வா.