மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
1508 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
1508 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
1508 days ago
முன்னணி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் அனிதா சம்பத். அவருக்கென்று தனி ரசிகர் வட்டம் இருந்தது. இதை உணர்ந்த அந்த சேனல் அவரை சீரியலில் நடிக்க கேட்டது. ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார். ஆனாலும் சில படங்களில் செய்தியாளராக நடித்தார்.
இடையில் என்ன நடந்தது என்று தெரிவில்லை. திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தார். பிக்பாஸ் இல்லத்தில் 84 நாட்கள் வரை இருந்த அனிதா பின்னர் வெளியேறினார். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சில்லுனு ஒரு காதல் தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். தொடர்ந்து தனக்கான முக்கியத்துவம் இருக்கும் கேரக்டரில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது புதிய தொடர் ஒன்றில் டைட்டில் கேரக்டரில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்.
1508 days ago
1508 days ago
1508 days ago