ஆர்ஆர்ஆர் பிரமோஷன் பாடல் : தனது முந்தைய பட ஹீரோக்களுக்கு ராஜமவுலி அழைப்பு
ADDED : 1795 days ago
ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட் நடிப்பில் ராஜமவுலி இயக்கி வரும் ஆர்ஆர்ஆர் படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே பேலன்ஸ் உள்ள நிலையில் தற்போது ஐதராபாத்தில் அப்படத்திற்கான பிரமோசன் பாடலை படமாக்கி வருகிறார் ராஜமவுலி. இரண்டு செட்களில் இந்த படப்பிடிப்பு நடக்கிறது. மேலும், இந்த பிரமோசன் பாடலில் ஆர்ஆர்ஆர் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மட்டுமின்றி, இதற்கு முன்பு தான் இயக்கிய படங்களில் நடித்த பிரபாஸ், நிதின், நானி, ரவிதேஜா, சுனில் என பல பிரபல நடிகர்களையும் இந்த பாடல் பிரமோசனில் நடிப்பதற்கு அழைத்திருக்கிறாராம் ராஜமவுலி.