மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1506 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1506 days ago
தமிழ் சினிமாவில் சில கூட்டணிகள் வெற்றிக் கூட்டணிகளாகவும், அதிர்ஷ்டக் கூட்டணிகளாகவும், ரசிகர்கள் ரசிக்கும் கூட்டணிகளாகவும் அமையும். அப்படியான ஒரு கூட்டணி தான் இயக்குனர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி. இந்தக் கூட்டணி முதன் முதலில் ஷங்கர் இயக்கிய 'ஜென்டில்மேன்' படம் மூலம் இணைந்தது. தொடர்ந்து தங்களது கூட்டணியில் இணைந்த 10 படங்களின் பாடல்களையும் சேர்த்து இப்போதும் ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
ஆனால், 'இந்தியன் 2' படத்தில் ரஹ்மானுக்குப் பதிலாக அனிருத்தை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தார் ஷங்கர். அடுத்து தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிக்க உள்ள புதிய படத்திற்கு தமனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார்.
ஷங்கர், ரஹ்மான் கூட்டணி இதுவரையில் இரண்டு படங்களில் மட்டுமே பிரிந்துள்ளது. 2005ல் வெளிவந்த 'அந்நியன்' மற்றும் 2012ல் வெளிவந்த 'நண்பன்' ஆகிய படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். ஒரு படம் மிஸ் ஆனாலும், அடுத்த படத்திலேயே இருவரும் மீண்டும் இணைந்துவிடுவார்கள்.
'இந்தியன் 2'வில் பிரிந்தவர்கள் அடுத்த படத்தில் இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ராம் சரண் நடிக்கும் படம் பான்-இந்தியா படம் என்பதால் ரஹ்மான் இருப்பது சிறப்பாக இருக்கும் என ஷங்கர், ரஹ்மான் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அதில் ஏன் ரஹ்மான் இல்லை என்பது குறித்து டோலிவுட்டில் விசாரித்த போது ஒரு தகவல் கிடைத்தது.
அதாவது, சிரஞ்சீவி நாயகனாக நடித்த 'சை ரா' படத்திற்கு முதலில் ரஹ்மான் தான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அது பற்றிய முதல் அறிமுக டீசர் கூட வெளியானது. பின்னர் அந்தப் படத்திலிருந்து ரஹ்மான் விலகிவிட்டார். அது சிரஞ்சீவி தரப்பில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை மனதில் வைத்து தான் ஷங்கர், ராம் சரண் படத்திற்கு ரஹ்மான் வேண்டாம், தமனை இசையமைக்க வையுங்கள் என்று சொன்னதாக தகவல் உலவி வருகிறது.
1506 days ago
1506 days ago