உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குட்டி சாண்டி வந்தாச்சு...! இன்ஸ்டாவில் வைரலாகும் குழந்தையின் வீடியோ

குட்டி சாண்டி வந்தாச்சு...! இன்ஸ்டாவில் வைரலாகும் குழந்தையின் வீடியோ

பிரபல நடன இயக்குனரான சாண்டி மாஸ்டருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள சாண்டி மாஸ்டருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் சாண்டி மாஸ்டர். இவரது மனைவி சில்வியா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் சில்வியா மீண்டும் கர்ப்பமானார். சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினார் சாண்டி. அதில், ரோபோ சங்கர், ரியோ ராஜ் உள்ளிட்ட விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் நேற்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சாண்டி குழந்தையின் பிஞ்சு கைகளின் வீடியோவுடன், எங்கள் ராஜா பிறந்து விட்டான் என பகிர்ந்துள்ளார்.

சாண்டி - சில்வியா தம்பதியருக்கு சூசன்னா என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !