ஜெய்பீம் - சூர்யா 39 பட தலைப்பு
ADDED : 1537 days ago
சூரரைப்போற்று படத்திற்கு பின் பல படங்கள் நடிகர் சூர்யா கைவசம் உள்ளன. கடந்தவாரம் தான் அவர் நடிக்கும் வாடிவாசல் படத்தின் பர்ஸட் லுக் வெளியானது. நேற்று பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் 40வது பட தலைப்பான எதற்கும் துணிந்தவன் என்பதை அறிவித்தனர். இந்நிலையில் இன்று அவரின் பிறந்தநாளில் அவரது 39வது பட தலைப்பை அறிவித்துள்ளனர். படத்திற்கு ‛ஜெய்பீம் என பெயரிட்டுள்ளனர்.
த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்கிறது. ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், லிஜோமோள் ஜோஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சூர்யா வக்கீல் வேடத்தில் உள்ளார். இதை வைத்து பார்க்கும் போது அவர் வக்கீலாக நடிக்கலாம் என தெரிகிறது. அடுத்தடுத்து சூர்யா பட அப்டேட்டால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.