மேலும் செய்திகள்
பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா
1501 days ago
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
1501 days ago
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
1501 days ago
அசுரன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் 'நரப்பா ஓடிடியில் வெளியானது. தெலுங்கில் ஸ்ரீகாந்த் அடலா இயக்கத்தில் வெங்கடேஷ் - பிரியாமணி முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். தமிழில் தனுஷின் மனைவியாக வந்த மஞ்சு வாரியரின் கதாபாத்திரத்தில் தெலுங்கில் பிரியாமணி நடித்துள்ளார். பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகாக மனம் கவர்ந்தவர் மீண்டும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
நாரப்பா பட அனுபவம் குறித்து பிரியாமணி அளித்த பேட்டியிஒ கூறியதாவது, 'அசுரன் படத்தை ஏற்கெனவே நான் பார்த்துட்டதால அதோட தெலுங்கு ரீமேக்லதான் பண்ணப்போறேன்னு தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். தெலுங்குல நிறைய கிளாமர் ரோல்களே பண்ணதால இந்த கேரக்டரும் சரி, கெட்டப்பும் சரி, என்னோட தெலுங்கு ரசிகர்களுக்கு ரொம்பவே புதுசு. ஆனா, தமிழ்ல அப்படி இல்ல. பருத்திவீரன் படத்திலேயே முத்தழகு கேரக்டர்ல கிராமத்துப் பொண்ணா நடிச்சிருந்தேன். கிளாமர் கேரக்டர்கள்லேயே பெரும்பாலும் என்னைப் பார்த்துவந்த தெலுங்கு ஆடியன்ஸுக்கு என்னோட இன்னொரு பக்கத்தையும் நாரப்பா மூலம் காட்ட முடிஞ்சிருக்கு.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
1501 days ago
1501 days ago
1501 days ago