கார்த்திக் காயம்: உடற்பயிற்சியின் போது தவறி விழுந்தார்
ADDED : 1617 days ago
நடிகர் கார்த்திக் தற்போது ஹிந்தி அந்தாதூன் தமிழ் ரீமேக்கிலும், திருப்பூரை சேர்ந்த டி.எம்.ஜெயமுருகன் இயக்கும் தீ இவன் படத்திலும் நடித்து வருகிறார். இரு படத்தின் படப்பிடிப்புகளும் கார்த்திக்கின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர் திடீரென உடற்பயிற்சி செய்யும்போது தவறி விழுந்து காயம் அடைந்துள்ளார். உடனடியாக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் ஏற்கெனவே எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் இப்போது மீண்டும் பிரச்சினை ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.