மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1496 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1496 days ago
பிரபல தொலைக்காட்சி நடிகையான பரீனா தனது கர்ப்பகால புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
விஜய் டிவி சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர் பரீனா. இவர் தான் கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். இதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கர்ப்பகால புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் கருப்பு உடையில் கர்ப்பமான வயிற்றில் மருதாணியிட்டு வெளியிட்ட புகைப்படம் வைரலாகி, இணையத்தில் பேசு பொருளாகவும் மாறியது.
இந்நிலையில் பரீனா தற்போது நீச்சல் குளத்தில் நீரில் மூழ்கியவாறு புதிய போட்டோஷூட் செய்துள்ளார். கர்ப்பமான வயிற்றுடன் இவ்வளவு ரிஸ்க்கான போட்டோஷூட் தேவையா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், இன்ஸ்டாகிராமில் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள பரீனா, கர்ப்ப காலம் வாழ்வின் ஓர் அங்கம் தான். நோயல்ல. எனவே கொண்டாடுங்கள் எதையும் ஜாக்கிரதையாக செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.
பரீனாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து ரசிகர்கள் அவரது தைரியத்தையும் பாராட்டி வருகின்றனர்.
1496 days ago
1496 days ago