உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛சூப்பர் சிங்கர்' சாம் விஷால் பாடிய மறவாதே ஆல்பம் வெளியீடு

‛சூப்பர் சிங்கர்' சாம் விஷால் பாடிய மறவாதே ஆல்பம் வெளியீடு

சூப்பர் சிங்கர் சாம் விஷால் நண்பர்கள் தினத்திற்காக பாடிய பாடல் யூ-டியூபில் வெளியாகிவுள்ளது. சாம் விஷால் விஜய் டிவி சூப்பர் சிங்கர் 7 - வது சீசனில் கலந்து கொண்டு 3வது இடத்தை பிடித்தார். தற்போது இவர் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு மறவாதே எனும் ஆல்பம் பாடலை பாடியுள்ளார். இந்த பாடலுக்கு வரிகள் எழுதி இசையமைத்துள்ளார் சம்யுக்தா.

கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி சோனி மியூசிக் சவுத் யூ-டியூப்பில் இந்த பாடல் வெளியானது. தற்போது 23-வது இடத்தில் ட்ரெண்டாகும் மறவாதே பாடல் ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்று வருகிறது. 1.30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் இந்த ஆல்பத்திற்கு கிடைத்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !