2000: அரசை அவதூறு செய்யும் படத்துக்கு 24 கட்டுகளுடன் அனுமதி
ADDED : 1521 days ago
புதுமுகங்கள் உருவாக்கி உள்ள படம் 2000. இது மத்திய அரசு கொண்டு வந்த ரூபாய் நோட்டு மதிப்பிழப்பை மையமாக வைத்து தயாராகி உள்ளது. ருத்ரன் இயக்கி உள்ளார். ருத்ரன் பராசு, சர்னிகா, கராத்தே வெங்கடேஷ், மூர்த்தி, பிர்லா போஸ், ரஞ்சன், தர்ஷன், கற்பகவல்லி, பிரியதர்ஷினி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். கோ.பச்சியப்பன் தயாரித்துள்ளார்.
இந்த படம் தணிக்கைக்கு சென்றபோது படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படம் மத்திய அரசை அவதூறு செய்வதாக கூறி தணிக்கை சான்றிதழ் தர மறுத்து விட்டனர். அதை தொடர்ந்து படம் ரிவைசிங் கமிட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. படத்தில் 105 இடங்களில் கத்தரி போட்டால் மட்டுமே அனுமதி தர முடியும் என்றார்கள். பல சுற்று பேச்சுவார்த்தைக்கு பிறகு 24 இடங்களில் கட் கொடுத்து தணிக்கை சான்றிதழ் கொடுத்தனர். படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளிவரும் என்று தெரிகிறது.