சமூக வலைத்தளங்களில் நடிகைகளின் ஓணம் ஸ்பெஷல்
ADDED : 1506 days ago
தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகளின் ஆதிக்கம் கடந்த காலங்களிலும் நிறையவே இருந்தது, இப்போதும் நிறையவே இருக்கிறது. தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக இருக்கும் நயன்தாரா மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்தவர் தான்.
அவரைத் தவிர கீர்த்தி சுரேஷ், மாளவிகா மோகனன், நித்யா மேனன், கல்யாணி பிரியதர்ஷன், மஞ்சு வாரியர், அனு இம்மானுவேல், ஓவியா, அமலா பால், ஐஸ்வர்ய லெட்சுமி, அனுபமா பரமேஸ்வரன், பார்வதி திருவோத்து, பார்வதி நாயர், அபர்ணா பாலமுரளி, ஐஸ்வர்யா மேனன், ரஜிஷா விஜயன், நிகிலா விமல், மகிமா நம்பியார் என ஒரு பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
இன்று கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனால், பல மலையாள நடிகைகள் மட்டுமல்லாது மற்ற மொழி நடிகைகளும் ஓணம் ஸ்பெஷலாக வெள்ளை நிற ஓணம் புடவையில் விதவிதமான புகைப்படங்களை எடுத்து டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட டைம்லைன்களை அலங்கரித்து வருகிறார்கள்.
பொதுவாகவே, மலையாள நடிகைகள் மீது தமிழ் ரசிகர்களுக்கு பாசம் அதிகம். இன்று பல நடிகைகளும் அவர்களது புகைப்படங்களுக்கு லைக்குகளை அள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.