மேலும் செய்திகள்
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1499 days ago
நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர்
1499 days ago
ஆப்கானிஸ்தானை சேர்ந்த நடிகை அர்ஷிகான், பல வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் இந்தியாவில் செட்டிலானார். இந்தி பிக்பாஸ் 11வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். இடையில் பல தொலைக்காட்சி தொடர்களில் பங்கேற்றார். தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தயாராவதாக இருந்த மல்லி மிஸ்து என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். தி லாஸ்ட் எம்பரரர் என்ற இந்தி படத்தில் நடித்தார். சில வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். தற்போது இசை ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார்.
அர்ஷிகானுக்கும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்தனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி உள்ளதால் திருமணத்தை அர்ஷிகான் ரத்து செய்துள்ளார்.
இதுகுறித்து அர்ஷிகான் கூறும்போது : ‛‛ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரருடன் அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. தற்போது தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி இருப்பதால் திருமணத்தை நிறுத்திவிட்டோம். எனக்கு கணவராக வர இருந்தவரிடம் இனிமேல் நண்பர்களாக இருக்கலாம் என்று கூறிவிட்டேன். ஒரு இந்தியரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்'' என்று கூறியுள்ளார். அந்த கிரிக்கெட் வீரர் பற்றிய விபரங்களை அவர் வெளியிடவில்லை.
1499 days ago
1499 days ago