நான் அவன் இல்லை: ராம்கோபால் வர்மா மறுப்பு
ADDED : 1548 days ago
பிரபல தெலுங்கு நடிகை இனயா சுல்தானாவுடன் இயக்குநர் ராம் கோபால் வர்மா போதையில் நடனமாடி அந்த நடிகையின் காலில் விழுந்து வணங்குவது போன்ற போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஏற்கெனவே நடிகையின் தொடையில் முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய ராம்கோபால் வர்மாவின் அடுத்த ஆபாசம் என்று இணையளத்தில் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் ராம்கோபால் வர்மா இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நான் மீண்டும் மீண்டும் இதை உறுதியாகச் சொல்கிறேன், இந்த வீடியோவில் இருப்பது நானல்ல. அதேபோல் இந்த வீடியோவில் நடனமாடும் பெண்ணும் நடிகை இனயா சுல்தானும் அல்ல. இதை நான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீது சத்தியம் செய்து சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.