சாமுண்டீஸ்வரி கோவிலில் தரிசனம் செய்த சுதீப்
                                ADDED :  1517 days ago     
                            
                             கன்னட திரையுலகில் முன்னணி நடிகராகவும் மற்றும் சமீப வருடங்களாக தென்னிந்திய அளவில் மிகப்பெரிய நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் கிச்சா சுதீப். தற்போது அவர் நடித்துள்ள விக்ராந்த் ரோனா என்கிற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த நிலையில் மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார் சுதீப். இதுகுறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது
சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய சுதீப், பிறந்தநாள் சிறப்பு தரிசனமாக, சாமுண்டீஸ்வரி கோவில் சென்று வழிபட்டுள்ளார் அவருடன் அவரது குடும்பத்தாரும் மிக நெருங்கிய நண்பர்கள் சிலரும் சென்றிருந்தனர். சுதீப்பின் எதிர்பாராத திடீர் வருகையால் கோவிலில் ரசிகர்கள் கூடிவிட அவர்களை கலைத்து, சுதீப்பை பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்குள் போலீசார் ரொம்பவே திணறித்தான் போனார்கள்.