மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1465 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1465 days ago
தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் மட்டும் மாறிமாறி நடித்து வந்த பிரகாஷ்ராஜ், கடந்த சில வருடங்களாக மலையாள திரையுலகிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்தவகையில் மோகன்லாலின் ஓடியன், பஹத் பாசில் நடித்த அதிரன் ஆகிய படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்திருந்தார் பிரகாஷ்ராஜ். இந்தநிலையில் வரால் என்கிற மலையாள படத்தில் மீண்டும் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் அச்சாயன்ஸ் என்கிற படத்தில் நடித்திருந்தார் பிரகாஷ்ராஜ். அந்தப்படத்தின் இயக்குனர் கண்ணன் தாமரக்குளம் என்பவர்தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் மஞ்சுவாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே மோகன்லால் நடித்த ஒடியன் படத்திலும் பிரகாஷ்ராஜ் மஞ்சுவாரியர் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1465 days ago
1465 days ago