மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1483 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1483 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1483 days ago
இந்தி படம் பார்க்காதவர்களுக்கு கூட அதிரடியான பேச்சுக்களாலும், நடவடிக்கைகளாலும் நன்கு தெரிந்த முகம் ஆகிவிட்டார் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத். இந்த நிலையில் தற்போது அவர் தமிழில் நடித்துள்ள தலைவி திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக இன்று(செப்., 10) வெளியாகி உள்ளது. அதனால் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் மும்பை, ஐதராபாத், சென்னை என மாறி மாறி கலந்து கொண்டு வருகிறார் கங்கனா.
இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கனா, தனக்கு தெலுங்கில் மீண்டும் நடிப்பதற்கு ஆசையாக இருப்பதாகவும், அதுவும் பிரபாஸுக்கு ஜோடியாக பூரி ஜெகந்நாத் டைரக்சனிலேயே மீண்டும் நடிக்க வேண்டும் என தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 12 வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் பூரி ஜெகந்நாத் டைரக்ஷனில் ஏக் நிரஞ்சன் என்கிற படத்தில் பிரபாஸ் ஜோடியாக கங்கனா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1483 days ago
1483 days ago
1483 days ago