ஜெயம் ரவியின் 28வது பட படப்பிடிப்பு தொடங்கியது - பிரியா பவானி சங்கர் நாயகி
ADDED : 1709 days ago
ஜெயம் ரவி மிகவும் எதிர்பார்த்த அவரது 25வது படமான பூமி போதிய வரவேற்பை பெறவில்லை. தற்போது அவர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த நிலையில் அவரது 28வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளரும், ஜெயம்ரவி, த்ரிஷா நடிப்பில் பூலோகம் படத்தை இயக்கியவருமான கல்யாண் இந்த படத்தை இயக்குகிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார், விவேக் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது.