தலைவி படம் பார்த்த ரஜினிகாந்த்
ADDED : 1479 days ago
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகியுள்ள தலைவி படம் சமீபத்தில் வெளியானது. ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனாவும் எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடிக்க, இயக்குனர் விஜய் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப்படம் ரசிகர்களிடம் அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என்றே தியேட்டர்களின் கலெக்சன் ரிப்போர்ட் சொல்கிறது.
இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு இந்தப்படத்தின் சிறப்புக்காட்சி ஞாயிறு அன்று திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்துவிட்டு சென்ற ரஜினிகாந்த், இயக்குனர் விஜய்யை தொலைபேசியில் அழைத்து, படம் குறித்து மனம் விட்டு பாராட்டினாராம். ரஜினியின் பாராட்டினால் படக்குழுவினர் தற்போது உற்சாகமாகி இருக்கிறார்களாம்.