10 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிந்து மாதவி
ADDED : 1495 days ago
2008ல் தெலுங்கில் அவகை பிரியாணி என்ற படத்தில் அறிமுகமானவர் தெலுங்கு நடிகை பிந்து மாதவி. அதற்கடுத்த ஆண்டு தமிழில் சேரனின் பொக்கிஷம் படத்தில் ஒரு கேரக்டரில் அறிமுகமானவர், அதையடுத்து வெப்பம், கழுகு படங்களில் நாயகியாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா,தமிழுக்கு எண்ஒன்றை அழுத்தவும், பசங்க-2 என பல ஹிட் படங்களில் நடித்தார். திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
தற்போது யாருக்கும் அஞ்சேல், மாயன், பகைவருக்கு அருள்வாய் போன்ற படங்களில் நடித்து வருபவர், பத்து ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கில் விகாஸ் வசிஸ்டா நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார். ஸ்ரீசைது இயக்கும் இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்ற நிலையில், வருகிற 14-ந் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.