சந்தானம் நாயகியின் பேஸ்புக்கை முடக்கிய ஹேக்கர்ஸ்
ADDED : 1479 days ago
தமிழில் சந்தானம் ஹீரோவாக அறிமுகமான 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தில் கதாநாயகியாக நடித்து அதன்பின் அவரது ஆஸ்தான நாயகியாக மாறியவர் நடிகை ஆஷ்னா ஜவேரி. கடைசியாக விமலுடன் இணைந்து 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படத்தில் நடித்திருந்தார். இந்தநிலையில் தனது பேஸ்புக் கணக்கை ஹேக்கர்ஸ் முடக்கி விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார் ஆஷ்னா ஜவேரி
“என்னுடைய பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கின் இந்தியா டீம் குறித்த விபரங்களை எனக்கு தெரிவிப்பவர்கள் பாராட்டப்படுவீர்கள்” என கூறியுள்ளார் ஆஷ்னா ஜவேரி. இதற்கு முன்னதாக பூஜா ஹெக்டே, அனுபமா பரமேஸ்வரன், கியாரா அத்வானி உள்ளிட்ட பல நடிகைகளின் சோஷியல் மீடியா கணக்குகள் ஹேக்கர்ஸால் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.