ஜெர்மன் திரைப்பட விழாவில் கர்ணன்
ADDED : 1483 days ago
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தாணு தயாரிப்பில், தனுஷ் நடித்த கர்ணன் படம் திரையரங்குகளில் கடந்த ஏப்ரல் 9ஆம்தேதி திரையிடப்பட்டது. நல்ல வசூலையும், வரவேற்பையும் பெற்றது. பின்னர் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு அங்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றது.
கடந்த சுதந்திர தினத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 9.4 டி.ஆர்.பி. ரேட்டிங் பெற்றது. தற்போது உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஜெர்மனி நாட்டில் பிராங்க்பர்ட் நகரில் வருகிற அக்டோபர் மாதம் 12,13,14 தேதிகளில் நடக்கவிருக்கும் நியூ ஜெனரேஷன் இண்டிபண்டன்ட் இண்டியன் பிலிம் பெஸ்டிவல் விழாவில் திரையிடப்படுகிறது.