துப்பாக்கி முனையில் பாலிவுட் நடிகையிடம் பணம் பறிப்பு
ADDED : 1531 days ago
பிரபல பாலிவுட் நடிகை நிகிதா ராவல். மிஸ்டர் ஹாட் மிஸ்டர் கூல், பிளாக் அண்ட் ஒயிட், தீ ஹீரோ அபிமன்யூ, அமர் கே போலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தவர், தற்போது வெப் சீரிஸ், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
டில்லி சாஸ்திரி நகரில் குடும்பத்துடன் வசிக்கும் நிகிதா நேற்று முன்தினம் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பியபோது காரில் வந்த முகமூடி கொள்ளையர்கள் அவரை வழிமறித்தனர். துப்பாக்கியை காட்டி மிரட்டி நிகிதாவிடம் இருந்து 7 லட்சம் ரொக்க பணம் மற்றும் நகைகளை பறித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.