உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மேக்கப்மேனுக்கு கார் பரிசளித்த வரலட்சுமி

மேக்கப்மேனுக்கு கார் பரிசளித்த வரலட்சுமி

தமிழ் சினிமாவில் நாயகி, வில்லி என நடித்து வந்த வரலட்சுமி, தற்போது தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்து வரும் படத்தில் கீ ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது டுவிட்டரில் தனது மேக்கப்மேன் ரமேஷின் பிறந்த நாளில் அவருக்கு ஒரு புதிய காரை பிறந்தநாள் பரிசாக வழங்கியுள்ளார் வரலட்சுமி.

அதுகுறித்த புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ள அவர், நீ என் ஒப்பனை நாயகன் மட்டுமல்ல, நீ என் வலது கை. நீ இல்லாமல் என்னால் எதுவும் செய்ய முடியாது. எனது பிறந்த நாள் பரிசு உனக்கு பிடிக்கும் என நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார் வரலட்சுமி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !