தியேட்டர்களில் ராஜவம்சம்
ADDED : 1536 days ago
சுந்தர்.சி உதவியாளர் கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி, யோகி பாபு, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ராஜவம்சம். சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தை சுந்தர்.சியின் பாணியிலேயே காமெடி, பேமிலி, செண்டிமென்ட் படமாக கதிர்வேலு உருவாக்கி உள்ளார். 49 நடிகர், நடிகைகளுடன் உருவாகியுள்ள இப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டி.டி.ராஜா தயாரித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் ரிலீசாக வேண்டிய இப்படம், கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டு, தற்போது வரும் அக்டோபர் 1ம் தேதி தியேட்டர்களில் வெளியிட இருப்பதாக தயாரிப்பு தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.