வருங்கால கணவருடன் காரில் மூழ்கி பலியான நடிகை
ADDED : 1478 days ago
மராத்தி மற்றும் இந்தி மொழி படங்களில் நாயகியாக நடித்து வந்தவர் ஈஸ்வரி தேஷ்பாண்டே (வயது 25). இவர் கடந்த 15-ந் தேதி தனது காதலர் சுப்பம் டெஜ் (வயது 28) உடன் கோவாவுக்கு காரில் சுற்றுலா சென்றிருந்தார். அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு, கடந்த திங்கள் அன்று இருவரும் மும்பை திரும்பியுள்ளனர். கோவாவின் அர்போரா கிராமத்திற்கு அருகில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் உள்ள குட்டையில் மூழ்கியது. காரில் இருந்து வெளியே வரமுடியாததால் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஈஸ்வரி தேஷ்பாண்டேவுக்கும் அவரது காதலருக்கும் அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. இந்த நிலையில் இருவரும் உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.