2022 தீபாவளிக்கு சூர்யா - சிவா இணையும் படம் வெளியாகிறது
ADDED : 1650 days ago
பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வரும் சூர்யா, இந்த படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் இணைகிறார். அண்ணாத்த படத்திற்கு முன்பே சூர்யாவுக்காக தான் உருவாக்கி வைத்திருந்த அதே கதையில் அவரை இயக்கப்போகிறார் சிவா.
நகர்ப்புற மாஸ் ஆக்சன் கதையில் இப்படம் உருவாகப்போகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை பொங்கலுக்கு நடைபெற உள்ளது. அதையடுத்து வருகிற பிப்ரவரி மாதத்தில் இருந்து படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ள சிவா, 2022ம் ஆண்டு தீபாவளிக்கு அப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.