உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் : பரவும் செய்தி

அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் : பரவும் செய்தி

நிசப்தம் படத்திற்கு பிறகு இன்னும் எந்த புதிய படத்திலும் நடிக்கவில்லை அனுஷ்கா. என்றாலும் ஏதாவது புதிய படங்களில் அவர் நடிப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

அதேபோல் பாகுபலி பிரபாஸ் தொடங்கி, கிரிக்கெட் வீரர்கள் வரை பலருடன் காதல், கல்யாணம் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தநிலையில் தற்போது ஒரு தெலுங்கு இயக்குனரை அனுஷ்கா காதலித்து வருவதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்தி பரவி வருகிறது.

தற்போது அனுஷ்காவுக்கு 39 வயதாகி விட்டதோடு சினிமா வாய்ப்புகளையும் தவிர்ப்பதால் அவர் திருமணம் செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !