உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நீண்ட 'ஹேர் ஸ்டைலுக்கு' விடை கொடுத்த 'பொன்னியின் செல்வன்' நடிகர்கள்

நீண்ட 'ஹேர் ஸ்டைலுக்கு' விடை கொடுத்த 'பொன்னியின் செல்வன்' நடிகர்கள்

மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிக்க உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்போது இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது. இந்தப் படத்திற்காக கடந்த இரண்டு வருடங்களாக விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு உள்ளிட்டவர்கள் கொஞ்சம் நீண்ட தலைமுடி, தாடி என இருந்தனர். படப்பிடிப்பு முடிந்ததால் தங்களது ஹேர்ஸ்டைலை மாற்றிக் கொண்டு பழைய ஹேர்ஸ்டைலுக்குத் திரும்பிவிட்டனர்.

முத்தையா இயக்கத்தில் 'விருமன்' படத்தில் வேறு தோற்றத்தில் நடிக்க கார்த்தி போய்விட்டார். ஜெயம் ரவி 'ஜனகன மண' படத்திலும், மற்றுமொரு புதிய படத்திலும் நடிக்கத் தயாராகிவிட்டார். அது போலவே மற்றவர்களும் அவரவர் நடிக்கும் புதிய படங்களின் கதாபாத்திரத்திற்கேற்ப ஹேர் ஸ்டைலை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் 2022 கோடை விடுமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குப்பிறகு சில மாதங்கள் கழித்து இரண்டாம் பாகம் வரலாம்.

'பொன்னியின் செல்வன்' படத்திற்காக இதுவரை எந்த ஒரு கதாபாத்திர அறிமுக போஸ்டரும் வெளியாகவில்லை. அவற்றிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !