உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் சேதுபதி படத்தில் இணையும் அனுகீர்த்தி வாஸ்

விஜய் சேதுபதி படத்தில் இணையும் அனுகீர்த்தி வாஸ்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா என பல படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் தற்போது விஜயசேதுபதி நடிக்கும் 46ஆவது படத்தை இயக்கி வருகிறார். சேதுபதிக்கு பிறகு இப்படத்தில் விஜயசேதுபதி போலீசாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி, பழனி பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் அனுகீர்த்தி வாஸ் என்ற புதுமுகம் நாயகியாக நடிக்கிறார். இந்த தகவலை அப்படத்தை தயாரிக்கும் நிறுவனம் டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அனுகீர்த்தி வாஸ் தமிழ்நாடு அளவில் நடை பெற்ற பெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்து வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !