படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த சீனிவாசன்
ADDED : 1707 days ago
ஹீரோவாக அறிமுகமாகி காமெடி நடிகராக மாறியவர் டாக்டர் சீனிவாசன். தனக்கு தானே பவர் ஸ்டார் என பட்டம் சூட்டிக் கொண்ட இவர் தற்போது பிக்கப் டிராப் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதில் நாயகியாக வனிதா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்தார் சீனிவாசன். உடனடியாக அவர் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அவர் மயங்கியதாக தெரிகிறது. தொடர்ந்து மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.