உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெயிட் குறைத்தது எப்படி? ரகசியத்தை வெளியிட்ட குஷ்பு

வெயிட் குறைத்தது எப்படி? ரகசியத்தை வெளியிட்ட குஷ்பு

ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்துள்ள குஷ்பு தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். சினிமாவை தாண்டி அரசியலிலும் உள்ள இவர் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையில் சினிமாவில் விட்ட இடத்தை பிடித்து விடவேண்டும் என்கிற உத்வேகத்தில் களமிறங்கியிருக்கிறார் குஷ்பு.

இந்த நிலையில் பெருத்த தனது உடல்கட்டை பெரிய அளவில் குறைத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்திய குஷ்பு, தனது ஸ்லிம் போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். அதையடுத்து உங்களது ஸ்லிம் ரகசியத்தைப் பற்றி சொல்லுங்கள் என்று நெட்டிசன்கள் பலரும் அவரிடத்தில் கேள்வி எழுப்பி வந்தநிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்டு அந்த ரகசியத்தை உடைத்துள்ளார் குஷ்பு.

அதில், நடைபயிற்சி செய்வதால் உடல் நன்றாக இருக்கும். அதையே தொடர்ந்து செய்து வரும்போது உங்களது எடை வேகமாக குறையத் தொடங்கிவிடும் என்று தெரிவித்துள்ளார் குஷ்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !