மனைவியின் பெயரை பச்சைக்குத்திய சினேகன்
ADDED : 1464 days ago
தமிழ் சினிமாவில் சுமார் 600 பாடல்கள் வரை எழுதியவர் பாடலாசிரியர் சினேகன். அதேபோல் சில படங்களிலும் நடித்திருக்கும் அவர் கமலின் மக்கள் நீதிமய்யம் கட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். சமீபத்தில் நடிகை கன்னிகா ரவி என்பது திருமணம் செய்து கொண்டார் சினேகன். அவரது திருமணத்தை நடிகர் கமல்ஹாசன் நடத்தி வைத்தார். அதையடுத்து மனைவியுடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார் சினேகன். தற்போது தனது மனைவி கன்னிகாவின் பெயரை அவர் தனது கையில் பச்சைக்குத்திக் கொண்டுள்ளார் . அந்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் கன்னிகா ரவி. அதேபோல் கன்னிகாவும் சினேகனின் பெயரை தனது கையில் பச்சைக்குத்திக்கொண்டுள்ளார்.