நாகினி மவுனிராய்க்கு திருமணம் : நீண்ட நாள் காதலரை மணக்கிறார்
ADDED : 1545 days ago
நாகினி தொடர் மூலம் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு அறிமுகமானர் மவுனி ராய். பிரபல ஹிந்தி தொடர் நடிகையான இவர் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் பல ஆண்டுகளாக சூரஜ் நம்பியார் என்ற தொழிலதிபரை காதலித்து வந்தார். கொரோனா காலத்தில் அவருடன் வசித்து வருவதாக வெளிப்படையாக அறிவித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது நிச்சயதார்த்த மோதிரத்துடன் படங்களை வெளியிட்டார். இந்த நிலையில் மவுனிராயின் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக அவரது உறவினர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருக்கிறார். திருமணம் துபாய் அல்லது இத்தாலியில் நடக்கும் என்று தெரிகிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி மவுனி ராயின் சொந்த ஊரான பாட்னாவில் நடக்க உள்ளது.