சன்னி லியோன் புகழ்பாடும் சதீஷ்
ADDED : 1507 days ago
காமெடி நடிகர் சதீஷ் தான் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு இடத்தில் சன்னி லியோன் பற்றி வசனம் பேசி விடுவார். காரணம் சன்னி லியோனின் தீவிர ரசிகர் சதீஷ். தற்போது ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் சன்னி லியோனுடன் நடித்தும் வருகிறார்.
அவருடன் இருக்கும் படத்தை வெளியிட்டு அவரது புகழ் பாடி இருக்கிறார் சதீஷ். அவர் கூறியிருப்பதாவது: திரையுலகில் நான் சந்தித்த நபர்களில் மிகவும் இனிமையான நபர்களில் ஒருவர் சன்னி லியோன். அவர் நல்ல நடிகை அதைவிட மிக அபாரமான டான்ஸர். அவருடன் பணிபுரிவது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. அவர் ஒரு மிகச் சிறந்த மனிதநேய மிக்கவராக உள்ளார் இருக்கிறார். என்று குறிப்பிட்டிருக்கிறார்