புனேயில் படப்பிடிப்பை தொடங்கும் ஷங்கர்
ADDED : 1495 days ago
தெலுங்கு நடிகர் ராம்சரண் - கியாரா அத்வானியை வைத்து ஷங்கர் இயக்கும் படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இப்படத்திற்கான பிரமாண்டமான செட் அமைக்கும் பணி புனேயில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் இரண்டாவது வாரத்தில் இருந்து படப்பிடிப்பை தொடங்குகிறார் ஷங்கர். முதலில் ராம்சரண் நடிக்கும் காட்சிகளை படமாக்குகிறாராம். அதையடுத்து ஒரு வாரம் கழித்து கியாரா அத்வானியும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம். இந்த படத்திற்காக மொத்தமாக கால்சீட்டை வழங்கியிருக்கிறாராம் கியாரா அத்வானி.