உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்க்கு மகளாக நடிக்கும் மகேஷ்பாபு மகள்

விஜய்க்கு மகளாக நடிக்கும் மகேஷ்பாபு மகள்

நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. விஜய்யின் 65வது படத்தின் பணிகளே இன்னும் முடியாத நிலையில் அடுத்த படத்தின் அறிவிப்புகள் வர தொடங்கிவிட்டன.

விஜய்யின் 66வது படத்தை இயக்குவதில் பல இயக்குனர்களிடையே கடும் போட்டி இருந்தது. ஆனால் தெலுங்கு இயக்குனர் வம்சிக்கு அந்த வாய்ப்பு சென்றது. இவர் தமிழில் கார்த்தியின் நடிப்பில் வெளியான 'தோழா', மகேஷ் பாபுவின் 'மகரிஷி' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர். இவர் மகேஷ் பாபுவின் ஆஸ்தான இயக்குனரும் கூட. தமன் இசையமைக்கும் இப்படத்தின் வில்லனாக நடிக்க பிரபல நடிகர் நானியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஆக்ஷன் படங்களில் நடித்து வரும் விஜய், இந்த படத்தின் மூலம் குடும்ப சென்டிமெண்ட் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா, விஜய்க்கு மகளாக நடிக்கவுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !