பிரம்மபுத்திரா புஷ்கரம்: நதிக்கரையில் மகா தீபாராதனை
ADDED :2240 days ago
கவுகாத்தி: அசாம், கவுகாத்தியில் பிரம்மபுத்திரா புஷ்கரம் விழாவை முன்னிட்டு பிரம்மபுத்திரா நதிக்கரையில் மகா தீபாராதனை நடந்தது.
பிரம்மபுத்திரா புஷ்கரம் விழா 12 ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வரும் புஷ்கரமானது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகா பிரம்மபுத்திரா புஷ்கரம் ஆகும். அதாவது குரு பகவான் தனுசு ராசிக்குள் பிரவேசிக்கும் அந்த பனிரெண்டு நாட்கள் பிரம்மபுத்திரா புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நவ., 5ம் தேதி முதல் 16ம் தேதி வரை 12 நாள்கள் புஷ்கரம் விழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு பிரம்மபுத்திரா நதிக்கரையில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த நேரம் நதியில் நீராடினால் நமது கவலைகள், பாவங்கள் தொலைந்து விடும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை