உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊட்டி காசி விசுவநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

ஊட்டி காசி விசுவநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

ஊட்டி; ஊட்டி காசி விசுவநாதர் கோவிலில், நேற்று திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


ஊட்டி காந்தள் பகுதியில், தட்சிணாமூர்த்தி திருமடத்தின் பழமையான அருள்மிகு காசி விசுவநாத சுவாமி மற்றும் அருள்மிகு விசாலாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், நேற்று முன்தினம் 6:00 மணிக்கு வேள்வி பூஜையும் 6:30 மணிக்கு, 108 சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 7:00 மணிக்கு பேரொளி வழிபாடுகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று காலை, 11:30 மணி முதல், 12:00 மணிவரை மீன லக்கனத்தில், குருமட முதல்வர் மருதாசல அடிகளார் முன்னிலையில், திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !