திருவண்ணாமலையில் மார்கழி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
ADDED :273 days ago
திருவண்ணாமலை; திருவண்ணாமலையிலுள்ள அண்ணாமலையார் மலையை பக்தர்கள் சிவனாக வழிபட்டு வருகின்றனர். இதையொட்டி, அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறமுள்ள, 14 கி.மீ., சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில், பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இதில், மார்கழி மாதத்திற்கான பவுர்ணமி திதி இன்று, 2ம் தேதி மாலை, 6:44 மணி முதல், நாளை, 3ம் தேதி மாலை, 4:42 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில், பக்தர்கள் கிரிவலம் வர உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.