புத்த பூர்ணிமா யாத்திரை
ADDED :3 hours ago
விழுப்புரம்: விழுப்புரத்தில் புத்த மறுமலர்ச்சி சங்கம் சார்பில் புத்த பூர்ணிமா யாத்திரை நடந்தது.
புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி திடலில் தொடங்கி புத்த பூர்ணிமா யாத்திரை மேற்கொள்ளப்பட்டது.
புத்த மறுமலர்ச்சி சங்க ஒருங்கிணைப்பாளர் நிஷாந்த் வரவேற்றார். செயலாளர் கல்பனா தலைமை தாங்கினார். தலைவர் கருணாமூர்த்தி தொடக்க உரையாற்றினார்.
பொருளாளர் பாரதிதாசன், நிர்வாகிகள் நாகராஜ், வைகுண்டம், ஜெயபால், பாண்டியன் முன்னிலை வகித்தனர். யாத்திரை திருச்சி சாலை, நேருஜி சாலை வழியாக விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அம்பேத்கர் சிலை வரை நடந்தது.