உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்களில் கும்பாபிஷேகம்

கோயில்களில் கும்பாபிஷேகம்

நத்தம்: பண்ணுவார்பட்டி முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை யொட்டி தீர்த்த அழைப்பு, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, தனபூஜை உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து புனித தீர்த்த குடங்களை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க விமான கலசம் மீது தீர்த்தத்தை ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது.

அப்போது வானத்தில் கருடன் வட்டமிட பக்தர்கள் பரவசம் அடைந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

குஜிலியம்பாறை: வைரம்பாளையம் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மா காளியம்மன், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீகருப்பணசுவாமி கோயில்களில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடந்தது. மங்கல இசையுடன் துவங்கிய விழாவில் விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், தீபாராதனை தொடர்ந்து புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கருடன் இரு முறை வட்டமிட்டது. சுற்றுப்பகுதி மக்கள் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !