திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம்; ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்டு நாளை முன்பதிவு
திருப்பதி; திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, அக்டோபர் 12, 13, 14, 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளுக்கான ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாளை அக்., 7ம் தேதி காலை 10:00 மணிக்கு இணையதளத்தில் வெளியிடவுள்ளது. பக்தர்கள் இந்த டிக்கெட்டுகளை https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே முன்பதிவு செய்யுமாறு திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.
மேலும் திருமலையில் அக்., 11 முதல் 20 வரை ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறவுள்ளதாலும், புரட்டாசி மாதத்தின் கடைசி வாரத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும், இந்த பத்து நாட்களுக்கு விஐபி இடைவேளை தரிசனம் மற்றும் சிறப்பு முன்னுரிமை தரிசனங்களை ரத்து செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இருப்பினும், நெறிமுறைக்கு உட்பட்ட முக்கியப் பிரமுகர்களுக்கான தரிசனம் தொடர்ந்து நடைபெறும். அக்டோபர் 10 முதல் அக்டோபர் 19 வரையிலான காலத்திற்கு விஐபி இடைவேளை தரிசனத்திற்கான பரிந்துரைக் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.. இவற்றைக் கருத்தில் கொண்டு பக்தர்கள் தங்கள் திருமலை யாத்திரையைத் திட்டமிடுமாறு தேவஸ்தானம் கேட்டுக்கொள்கிறது.