அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடராஜப் பெருமான் மஹா தரிசனம்
ADDED :154 days ago
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி நடைபெற்றது.
அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழாவின் 13ம் நாளான இன்று மஹா தரிசனம் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் பக்தர்களுக்கு ஸ்ரீ நடராஜ பெருமான், ஸ்ரீ சிவகாமி அம்பாள் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். அதனையொட்டி சிவனடியார் மெய்யுறுகி சங்கு நாதம் இசைத்து வழிபட்டனர்.