ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) அபார ஆற்றல்
இந்த மாதம் புதன் டிச.2 வரை நற்பலன் கொடுப்பார். அதன் பின் அவர் சாதகமற்ற இடத்திற்கு செல்கிறார். இதை கண்டு நீங்கள் பயப்பட வேண்டாம் காரணம் சுக்கிரன் நவ.22 முதல் சாதகமான இடத்திற்கு வருகிறார். மேலும் செவ்வாய் மாதம் முழுவதும் நற்பலன் தருவார். அவரால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும்.
புதனால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். டிச. 2க்கு பிறகு கணவன், மனைவி இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு வரலாம். தம்பதி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவும். பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் காண்பர். உங்களால் குடும்ப வாழ்வு சிறக்கும். பொன், பொருள் சேரும். சகோதரர் மிக உறுதுணையாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும் பெண் காவலர்கள் சிறப்பான நிலை பெறுவர். உறவினர் வகையில் மனக்கசப்பும், கருத்து வேறுபாடும் ஏற்படலாம். உடல்நிலை அதிருப்தியளிக்கலாம். கேதுவால் விபத்து பயம், உடல்நலக்குறைவு ஏற்படலாம். சூரியனால் வயிறு தொடர்பான உபாதை ஏற்படலாம்.
சிறப்பான பலன்கள்:
தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் பதவி உயர்வு காண்பர். ஐ.டி., துறையினர்களுக்கு நவம்பர் 22-க்கு பிறகு சக பெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். வக்கீல்கள் தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.வீடு-, மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள்சிறப்பான முன்னேற்றத்தை காணலாம்.
தொழில் நவ.22க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.
அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்க பெறுவர். மக்கள் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். பொதுநல சேவகர்கள் மாத பிற்பகுதியில் பெண்களின் அனுகூலத்தால் சிலர் உன்னத நிலைக்கு உயர்த்தப்படுவர். கலைஞர்கள் மாத பிற்பகுதியில் முன்னேற்றம் காண்பர். புகழ், பாராட்டு எதிர்பார்த்தபடி இருக்கும். சக பெண் கலைஞர்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர்.
சுமாரான பலன்கள்:
தொழில்அதிபர்கள் புதிய தொழில் தற்போது வேண்டாம். பண விஷயத்திலும் மற்றவரை நம்ப வேண்டாம். புதிய மாதம் முதலீடு போடுவதை தவிர்க்கவும்அரசு வேலையில் இருப்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு டிச.2க்கு பிறகு வேலைப் பளு கூடும் ஐ.டி., துறையினருக்கு நவ.22 வரை மன வேதனை, நிலையற்ற தன்மை, பொருளாதார சரிவு ஏற்படலாம். மருத்துவர்கள் சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம்.
கலைஞர்களுக்கு நவ. 22 வரை புதிய ஒப்பந்தம் பெறுவதில் தடைகள் குறுக்கிடலாம்.
பால்பண்ணை தொழில் டிச. 2க்கு பிறகு கால்நடைகள் மூலம் வருமானம் சுமாராக இருக்கும்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் டிச.2க்கு பிறகு கல்வியில் அதிக சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும்.
* நல்ல நாள்: நவ.18, 19,24,25,26,27 டிச.3,4,5,6,7,11,12,15,16
* கவன நாள்: நவ.28,29,30 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்:2,3
* நிறம்: சிவப்பு, பச்சை
* பரிகாரம்:
● சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள் தீபம்
● தினமும் காலையில் நீராடி சூரிய நமஸ்காரம்
● தேய்பிறை சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு