காரைக்கால் கோயில்களில் தீர்த்தவாரி
ADDED :2160 days ago
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு முக்கிய கோவில்களில் கடைமுக தீர்த்தமஹாத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில் கோவில்பத்து சுயம்வர தபஸ்வினி உடனமர் பார்வதீஸ்வரர் திருக்கோயில் மற்றும் கைலாசநாதர் தேவஸ்தானத்தை சேர்ந்த ஸ்ரீ அண்ணாமலை ஈஸ்வரர் கோயிலில் நேற்று கடைமுக தீர்த்த தீர்த்த மஹாத்ஸவம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு பார்வதீஸ்வரர் மற்றும் அண்ணாமலை ஈஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.பின் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதிகள் முலம் மதகடி அரசலாறு தென்கரையில் துலாஸ்நாநம் நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.